ஜெயலலிதாவுடன் ஒப்பிடப்பட்ட அஜித்குமார் மகள்: பரபரப்பை கிளப்பும் போஸ்டர்

Report Print Raju Raju in இந்தியா
477Shares
477Shares
lankasrimarket.com

வருங்காலத் தங்கத்தாரகையே என்று நடிகர் அஜித்குமார் மகளின் படத்தைப் போட்டு ஒட்டப்பட்டிருக்கும் போஸ்டர் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல நடிகர் அஜித்குமார் - ஷாலினி தம்பதியின் மகள் அனோஷ்காவின் பிறந்தநாள் இன்று, இதை தமிழகம் முழுக்க அஜித் ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள். டுவிட்டரில் நேற்று #HBDPrincessAnoushkaAjith என்ற டேக் இந்தியளவில் டிரண்டானது.

அனோஷ்காவின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் மதுரையெங்கும் வாழ்த்து சொல்லி பிரமாண்ட போஸ்டர்களை அஜித் ரசிகர்கள் ஒட்டியுள்ளனர்.

நேற்று காலை மதுரையில் ஆதரவற்றவர்களை தேடிச்சென்று நலத்திட்ட உதவிகளை செய்த ரசிகர்கள் கோயில்களில் அன்னதானமும் வழங்கினார்கள்.

குறிப்பாக ஒரு போஸ்டரில் அனோஷ்காவை ஜெயலலிதா கெட்டப்பில் சித்தரித்தது எல்லோரையும் திரும்பி பார்க்க வைத்தது.

அதில் எதிர்கால தங்கத்தாரகையே என்று பதியப்பட்டிருந்தது. இது ஜெயலலிதாவை வாழ்த்த அ.தி.மு.க-வினர் பயன்படுத்தும் வாசகம் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்