ரஜினி முத்திரையில் தாமரை நீக்கம்: தமிழிசை சொல்வது என்ன?

Report Print Fathima Fathima in இந்தியா
269Shares
269Shares
ibctamil.com

பாபா முத்திரையில் இருந்து தாமரையை நீக்கியது அவரது தனிப்பட்ட முடிவு, இதனால் பாஜகவுக்கு பின்னடைவு ஏதுமில்லை என தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.

எங்கு பார்த்தாலும் ரஜினியின் அரசியல் பிரவேசப் பேச்சு தான், சமூக வலைத்தளங்களிலும் ரஜினிக்கு ஆதரவாகவும், எதிராகவும் கருத்துகள் உலா வருகின்றன.

இந்நிலையில் ரஜனியின் பாபா முத்திரையில் இருந்த தாமரை பாஜகவுக்கு ஆதரவாக இருக்கிறது என விமர்சனங்கள் எழ, தாமரையை அகற்றினார் ரஜினி.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், ரஜினியின் ஆன்மிக அரசியல் புதிய விஷயமில்லை, அவர் இன்னும் நேரடியாக களத்தில் குதிக்கவில்லை.

முதலில் குதிக்கட்டும், மக்கள் பிரச்சனைகளை முன்னெடுத்து செல்லட்டும், தமிழ்நாட்டில் எது நடந்தாலும் பாஜக பின்னணியில் இருப்பதாக கூறப்படுகிறது.

அதேபோன்று தான் ரஜினியின் அரசியல் பிரவேசத்திலும் பாஜகவை தொடர்புபடுத்தி பேசுகிறார்கள், அதில் உண்மை ஏதுமில்லை.

பாபா முத்திரையில் தாமரையை நீக்கியது ரஜினியின் தனிப்பட்ட முடிவு, இதனால் பாஜக-வுக்கு பின்னடைவு இல்லை. ஆன்மிக அரசியலை காரணம் காட்டி காவி கட்சி, மதவாத கட்சி என பாஜகவை கூறுவது ஏற்றுக்கொள்ள முடியாது.

திராவிட கட்சிகளின் ஆட்சியில் பல்வேறு சிலைகள் காணவில்லை, இதற்கு மாற்றம்தான் ஆன்மிக அரசியல் என பேசியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்