அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை உத்தரவு

Report Print Fathima Fathima in இந்தியா
26Shares
26Shares
ibctamil.com

தமிழ்நாட்டில் அரசு பேருந்துகள் இயக்கப்படாததால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

நேற்றிரவும் பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில் வேலைநிறுத்தம் தொடரும் என்று தொழிற்சங்கத்தினர் அறிவித்தனர்.

இந்நிலையில் இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் வாராகி என்பவர் தொடர்ந்த வழக்கு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

இதன்போது, வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள போக்குவரத்து ஊழியர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டனர்.

பணிக்கு வர மறுத்தால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் பொதுமக்களின் நலன் கருதியே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், அத்தியாவசிய சேவைகள் பட்டியலில் இருப்பவர்கள் இவ்வாறு திடீர் போராட்டத்தில் இறங்கக்கூடாது எனவும் எச்சரித்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்