காதல் கணவரை கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொன்ற மனைவி: சிக்கியது எப்படி?

Report Print Raju Raju in இந்தியா

தமிழ்நாட்டில் கணவரை கொலை செய்ததாக மனைவியும், கள்ளக்காதலனும் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை கொடுங்கையூரை சேர்ந்தவர் உதயகுமார் (38) இவரும் வசந்தி (30) என்ற பெண்ணும் காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் தம்பதிக்கு ஒரு மகள் உள்ளார்.

இந்நிலையில் ரமேஷ் என்பவருடன் வசந்திக்கு கள்ளக்காதல் ஏற்பட்டது. இதனால் அவர் தனது கணவரை விட்டுப்பிரிந்து, மகளுடன் ரமேஷ் வீட்டில் வசித்து வந்தார்.

மகளை தன்னுடன் அனுப்பிவைக்கும்படி கேட்டும் வசந்தி சம்மதிக்காததால், இதற்கு உதவும்படி வசந்தியின் தம்பி கார்த்திக்கிடம் (30) உதயகுமார் கேட்டார்.

இதையடுத்து கார்த்திக்கும், உதயகுமாரும் கடந்த 21-ஆம் திகதி ஒன்றாக மது அருந்தினார்கள்.

அப்போது இருவருக்கும் தகராறு ஏற்பட்ட நிலையில் கார்த்திக், உதயகுமாரை கத்தியால் குத்திக் கொலை செய்தார்.

போதையில் ரத்தக்கறையுடன் சுற்றிதிரிந்த கார்த்திக்கை கைது செய்த பொலிசார் அவரிடம் விசாரணை நடத்தினார்கள்.

அதில், வசந்தியும், ரமேஷும் சேர்ந்து உதயகுமாரை கொல்ல தனக்கு திட்டம் வகுத்து கொடுத்ததை கார்த்திக் ஒத்து கொண்டார்.

இதையடுத்து தலைமறைவாக இருந்த வசந்தி மற்றும் ரமேஷை பொலிசார் கைது செய்துள்ளனர்.

அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers