தாலி கட்டிய 15 நிமிடங்களில் புதுமாப்பிள்ளைக்கு காத்திருந்த அதிர்ச்சி!

Report Print Santhan in இந்தியா

இந்தியாவில் மாப்பிள்ளை ஒருவர் லட்சங்களை பறிகொடுத்ததோடு மட்டுமின்றி, அவருக்கு நடந்த கல்யாணமும் பொய் கல்யாணம் என்றால் நம்பமுடிகிறதா? அப்படி ஒருவர் தான் தற்போது ஏமாந்து போய் நிற்கிறார்.

ராஜாஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர் சஜ்ஜன்சிக், இவருக்கு நெடுநாட்களாக திருமணம் ஆக வில்லை, இதனால் அவருக்கு தொடர்ந்து வரன் தேடியும் கிடைக்கவில்லை.

இதை அறிந்த ஏமாற்று கும்பல் ஒன்று சஜ்ஜின்சிக்கை ஏமாற்ற திட்டம் தீட்டியுள்ளது, அதன் படி அந்த கும்பல் அனிதா என்ற பெண்ணை அவர்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.

அப்போது அனிதா, உஜ்ஜயினியைச் சார்ந்த காஜல் என்ற பெண்ணை அவருக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்துள்ளார்.

திருமணப் பரிந்துரை உதவிக்காக அனிதாவுக்கு 50,000 ரூபாயும், அவளுடன் இருந்த முகேஷுக்கு 2 லட்சம் ரூபாயும் கட்டணமாக கொடுக்க வேண்டும் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

நெடுநாட்கள் திருமணமாகாத ஏக்கத்தில் இருந்த சஜ்ஜின்சிக் இதற்கு ஏற்றுக் கொண்டார், அதன் படி கடந்த டிசம்பர் மாதம் 30-ஆம் திகதி திருமணம் நடைபெற்றுள்ளது.

திருமணம் முடிந்தவுடன் அனிதா மற்றும் அவளுடன் இருந்த முகேசுக்கு பணம் மாறியுள்ளது. பணம் கைக்கு வந்தது தான் நேரம், அடுத்த நொடியே இருவரும் அங்கிருந்து ஏதோ காரணம் கூறி ஓடிவிட்டனர்.

இதையடுத்து சஜ்ஜன், தன் புத்தம் புது மனைவி காஜலுடன் தனது ஊருக்குச் சென்று கொண்டிருந்த போது, பொலிசாரைக் கண்டதும் இவர்கள் தன்னைக் கடத்திச் செல்கின்றனர் என்று கத்தியுள்ளார்.

அதன் பின் பொலிசார் நடத்திய விசாரணையில், தன்னையும், தன் குழந்தைகளையும் காப்பாற்றிக் கொள்வதற்காகவே அவர் இந்த நாடகத்திற்கு ஒப்புக் கொண்டுள்ளார். இந்த நாடகத்திற்கு அவருக்கு 10,000 ஆயிரம் ரூபாய் பேசப்பட்டுள்ளது.

மேலும் இந்த திருமணத்திற்கு அவர் வெறும் 10 நிமிடங்கள் மட்டும் நடித்தால் போதும் என்று கூறி அழைத்து வந்துள்ளனர்.

ஆனால் சஜ்ஜனோ அவரை விடாமல் அழைத்துக் கொண்டு ஊருக்குச் செல்ல கார் ஏறியதால், காஜல் அதிர்ச்சியடைந்துள்ளார்.

தனக்கும், தன் குழந்தைகளுக்கும் இந்தத் திருமணத்தால் ஏதாவது பாதிப்பு வந்து விடுமோ என்று பயந்து போய் பொலிசாரிடம் கெஞ்சியுள்ளார்.

பொலிசார் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருவதுடன் குற்றவாளியை தேடிவருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers