கமல்ஹாசனுக்கு எதிராக ஆர்கே நகரில் ஆர்ப்பாட்டம்

Report Print Gokulan Gokulan in இந்தியா

நடிகர் கமல்ஹாசனுக்கு எதிராக ஆர்கே நகரில் போராட்டம் நடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கடந்த சில மாதங்களாக அரசியல் ஆர்வம் இல்லாதவர்கள் கூட அரசியல் செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள உதவியது ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்.

தேர்தலின் முடிவில் சூரியனும் உதிக்கவில்லை, இலைகளும் மலரவில்லை, ஏன் என்று ஆராய்ந்து பார்த்தால் குக்கரின் விசில் சத்தம் நம் செவிகளுக்கு எட்டியது.

அப்படி சுயேட்சை வேட்பாளராக குக்கர் சின்னத்தில் நின்று வெற்றி பெற்றார் டிடிவி தினகரன். பணப்பட்டுவாடா செய்யததன் காரணமாக தான் இவர் வெற்றியடைந்தார் என்பதை தோல்வி அடைந்த மற்ற கட்சிகள் இன்றும் குற்றம் குறை கூறி வருகின்றனர்.

இந்நிலையில் கமல்ஹாசன் ஆர்.கே.நகரில் சுயேச்சை வேட்பாளரிடம் "பணம் பெற்று வாக்களித்தது, திருடனிடமிருந்து பிச்சை எடுப்பதற்கு சமம்” என கருத்து வெளிப்படுத்தியிருந்தார்.

சீண்டியவர்களை சும்மா விடுவார்களா எதிராளிகள்? இதனால் தினகரன் தரப்பு கடும் கோபம் அடைந்து, கமலுக்கு எதிராக காவல் நிலையத்தில் புகார் பதிவும் செய்துள்ளனர்.

இந்நிலையில் பொதுமக்கள் என கூறி சிலர் இன்று ஆர்.கே.நகர் தொகுதியில் நடிகர் கமல்ஹாசனை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தண்டையார்பேட்டையில், திருவொற்றியூர் சாலையில் சாலை மறியல் நடந்ததால் பரபரப்பு நிலவியது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers