8 பெண்களைத் திருமணம் செய்து ஏமாற்றிய ஆசாமி: சிக்கியது எப்படி தெரியுமா?

Report Print Arbin Arbin in இந்தியா

தமிழகத்தின் கோவையில், இணையதள திருமணத் தகவல் மையம் மூலமாக, பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த நபரிடம் பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை பி.என்.பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் குமுதவள்ளி. திருமணமாகி கணவரை இழந்த இவர், தனியார் இணையதள திருமண மையம் மூலமாக வரன் தேடி வந்துள்ளார்.

இந்நிலையில், தனியார் திருமண தகவல் மையம் மூலமாக வெள்ளலூர் பகுதியைச் சேர்ந்த புருஷோத்தமன் (45) என்பவர் அறிமுகமானார்.

இதையடுத்து, குமுதவள்ளிக்கும், புருஷோத்தமனுக்கும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

திருமணத்துக்குப் பின்னரே, புருஷோத்தமன் ஏற்கெனவே பலமுறை திருமணமானவர் என்று குமுதவள்ளிக்குத் தெரியவந்திருக்கிறது.

இதைத்தொடர்ந்து, அவர் போத்தனூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், புருஷோத்தமனிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதில் புருஷோத்தமனுக்கு ஏற்கெனவே திருமணமாகி, கல்லூரி படிக்கும் வயதில் ஒரு மகள் இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

ஆனால், தனக்கு திருமணமானதை மறைத்து, அவர் குமுதவள்ளியை திருமணம் செய்துள்ளார். இதற்கு, இணையதள திருமண தகவல் மையம் நடத்தி வரும் மோகன் மற்றும் வனஜா குமாரி என்பவர்களும் உடந்தையாக இருந்ததும் தெரியவந்துள்ளது.

இதே பாணியில் இவர் 8 பெண்களை திருமணம் செய்து ஏமாற்றிய தகவல் வெளியாகி கோவை பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்