ஓடும் பேருந்தில் உயிரிழந்த பயணி: நண்பனுடன் நடுவழியில் இறக்கிவிடப்பட்ட பரிதாபம்

Report Print Kabilan in இந்தியா
87Shares
87Shares
lankasrimarket.com

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசு பேருந்தில் பயணித்த பயணி திடீரென இறந்ததைத் தொடர்ந்து பேருந்து நடத்துனர் இறந்தவரின் நண்பரை சடலத்துடன் பாதி வழியிலேயே இறக்கிவிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூருவிலிருந்து திருக்கோவிலூர் சென்ற அரசு பேருந்தில், கட்டிட தொழிலாளர்கள் இரண்டு பேர் பயணித்துள்ளனர்.

இந்நிலையில் சூளகிரி அருகே பேருந்து சென்றபோது, தொழிலாளிகளில் ஒருவர் உடல்நிலை சரியில்லாமல் இறந்துள்ளார்.

இதனையறிந்த பேருந்து நடத்துனர் சூளகிரி புறவழிச்சலையிலேயே பேருந்தை நிறுத்தி, இறந்தவரின் சடலத்துடன் அவரது நண்பரை இறக்கிவிட்டுள்ளார், மேலும் பயணச்சீட்டையும் வாங்கிச் சென்றுள்ளார்.

இதனைத் தொடர்ந்து சுமார் மூன்று மணிநேரம் இறந்த உடலுடன், சூளகிரி அருகேயுள்ள தேசிய நெடுஞ்சாலையில் அந்நபர் சடலத்துடன் காத்திருந்தார்.

இந்நிலையில் தகவல் அறிந்த சூளகிரி பொலிசார், சம்பவ இடத்துக்கு விரைந்து தனியார் ஆம்புலன்ஸில் அந்நபரை சடலத்துடன் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்