பூ, பொட்டு இல்லாமல் வாழ முடியாது: நெஞ்சை உருக்கும் சோக சம்பவம்

Report Print Harishan in இந்தியா
316Shares
316Shares
lankasrimarket.com

சென்னையில் மனைவி தற்கொலை செய்து கொண்ட துக்கத்தில் கணவனும் இறந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மந்தவெளி பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ், பூங்கா ஒன்றில் பணிபுரிந்து வந்தவருக்கு சில மாதங்களுக்கு முன் வயிற்றில் வலி ஏற்பட்டுள்ளது, மருத்துவமனையில் சோதனை செய்தபோது வயிற்றில் புற்றுநோய் ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

இதனால் கடுமையாக அவதிப்பட்டு வந்த பிரகாஷை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என அவரது மனைவி உமா மற்றும் மகன் கேசவன் தொடர்ந்து போராடி வந்துள்ளனர்.

நாளடைவில் புற்றுநோயின் தீவிரம் அதிகரித்துவிடவே பிரகாஷின் கதறலை பார்க்கமுடியாமல் அவரது மனைவி தவித்து வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 9-ஆம் திகதி வீட்டை விட்டு வெளியேறிய உமாமகேஷ்வரி, தனது மகனின் செல்போனுக்கு ‘அப்பாவை நன்றாகக் கவனித்துக்கொள். நான் என் முடிவைத் தேடிக்கொள்கிறேன்’ என குறுஞ்செய்தி அனுப்பிவிட்டு மாயமாகியுள்ளார்.

இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த மகன் கேசவன் தனது உறவினருடன் சென்று பொலிசில் புகார் தெரிவித்த நிலையில் அவர்களும் காணாமல் போன உமாவை தேடி வந்துள்ளனர்.

ஆனால் உமா-வின் உடல் கடற்கரையில் சடலமாக ஒதுங்கியதால், சோகத்தில் பிரகாஷின் உயிரும் பிரிந்துள்ளது.

இதுகுறித்து பொலிசார் தரப்பு கூறுகையில், புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பிரகாஷுக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள் கைவிரித்துவிட்டனர். இதனால் அவரது மனைவி உமாமகேஸ்வரி மனமுடைந்து காணப்பட்டுள்ளார்.

அடிக்கடி பிரகாஷிடம், பூவும் பொட்டுமாக வாழ்ந்த என்னால் நீங்கள் இல்லாமல் வாழ முடியாது என்று புலம்பியிருக்கிறார். அப்போது, பிரகாசும் கேசவனும் உமாமகேஸ்வரிக்கு ஆறுதல் கூறியுள்ளனர்.

ஆனால் உமாகேஸ்வரி, விரக்தியில் சில தினங்களுக்கு முன்பு கடலில் குதித்து தற்கொலை செய்துகொண்டார். அவரது பிரிவால் பிரகாசும் இறந்துவிட்டார்' என கூறியுள்ளனர்.

ஒரே நேரத்தில் தாய் மற்றும் தந்தை இருவரையும் இழந்து வாடிய மகன் கேசவனின் அழுகை, அனைவரின் நெஞ்சையும் உறுக்கிவிட்டதாக சென்னை மக்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்