நீங்க போய் திருடிட்டா? கனிமொழியை மோசமாக விமர்சித்த ஹெச்.ராஜா

Report Print Kabilan in இந்தியா
142Shares
142Shares
ibctamil.com

திருச்சியில் கடந்த 6ஆம் திகதி நடந்த மாநாடு ஒன்றில் கலந்து கொண்ட திமுக எம்பி கனிமொழி, திருப்பதி ஏழுமலையானுக்கு சக்தியிருந்தால் எதற்கு அவருக்கு காவல் என கேள்வி எழுப்பியிருந்ததாக தெரிகிறது.

கனிமொழியின் இந்த கருத்துக்கு இந்து மக்கள் கட்சி கடும் கண்டனத்தை தெரிவித்துள்ள நிலையில், பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா மேடையில் மோசமாக விமர்சித்துள்ளார்.

கனிமொழியுடன் சேர்த்து ஸ்டாலின் மற்றும் கலைஞர் கருணாநிதியையும் தரக்குறைவாக விமர்சித்து பேசியுள்ளார்.

அத்துடன் மானங்கெட்டவன் என வைரமுத்து பற்றிய பேசிய ஹெச்.ராஜாவின் இந்த பேச்சுக்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.

இந்நிலையில் இந்து மக்கள் கட்சி சார்பில் மாநில செயலாளர் வீரமாணிக்கம் சிவா என்பவர் இன்று கனிமொழி மீது புகாரளித்துள்ளார்.

அதில், சுமார் 150 கோடி இந்துக்களின் மனதை புண்பட்டுவிட்டதாகவும், பக்தர்களுக்கு இந்த கருத்து மிகுந்த மனவேதனையை ஏற்படுத்தியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

மேலும் கனிமொழியை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டுமென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்