மனைவி நல்ல வேலையில் இருந்ததால் பொறாமையில் கணவன் செய்த கொடூர செயல்

Report Print Raju Raju in இந்தியா
757Shares
757Shares
lankasrimarket.com

இந்தியாவில் மனைவி நல்ல வேலையில் இருப்பதால் பொறாமை கொண்ட கணவர் அவரை கொலை செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலத்தின் நொய்டாவில் தான் இச்சம்பவம் நடந்துள்ளது. குல்தீப் ராகவ் என்ற நபருக்கும் ரிச்சா சிசோடியா (24) என்ற பெண்ணுக்கும் கடந்த இரண்டாண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது.

ரிச்சா தனியார் நிறுவனம் ஒன்றி பொறியாளராக பணிபுரிந்து வருகிறார். ஆனால் கடந்த 2011-ல் பி.டெக் படிப்பை முடித்த ராகவுக்கு சரியான வேலை எதுவும் கிடைக்காததால் தனது தந்தை மளிகை கடையில் உதவியாளராக வேலை செய்து வந்தார்.

இந்நிலையில் மனைவி மட்டும் நல்ல வேலையில் இருக்கிறாரே என அவர் மீது ராகவுக்கு பொறாமை ஏற்பட்டு அது அவருக்குள் தாழ்வு மனபான்மையை உருவாக்கியுள்ளது.

இது குறித்து ரிச்சாவுடன் ராகவ் அடிக்கடி சண்டையிட்டு வந்துள்ளார். இந்நிலையில் கணவன் மனைவி இடையே சில தினங்களுக்கு முன்னர் சண்டை முற்றிய நிலையில் கூரான பொருளை கொண்டு ரிச்சாவை ராகவ் தாக்கியுள்ளார்.

இதில் படுகாயமடைந்த ரிச்சா மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதையடுத்து பொலிசார் ராகவ்வை கைது செய்துள்ளனர். விசாரணையில் ரிச்சாவுக்கு வரதட்சணை கொடுமை நடந்துள்ளதும் தெரியவந்துள்ளது.

இதையடுத்து ராகவின் தந்தையையும் பொலிசார் கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.

இதனிடையில் ரிச்சா உடலில் அதிக காயம் உள்ளதால் ராகவ் குடும்பத்தினரில் குறைந்தபட்சம் மூன்று பேராவது சேர்ந்து அவரை தாக்கியிருக்கலாம் என ரிச்சாவின் உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்