மலேசியாவில் மாயமான தமிழக இளைஞர் மீட்பு: பெற்றோர் மகிழ்ச்சி

Report Print Arbin Arbin in இந்தியா
247Shares
247Shares
lankasrimarket.com

மலேசியாவில் மாயமான ராமநாதபுரம் இளைஞர் 20 நாட்களுக்குப் பின்னர் நாடு திரும்பியதை அடுத்து அவரது குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் ஆனந்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முகம்மது யாசீன். இவர் பினாங்கு மாநிலம் பட்டர்வொர்த்த் என்ற பகுதியில் பல்பொருள் அங்காடியில் கடந்த 4 ஆண்டுகளாக வேலை பார்த்து வந்தார்.

இந்நிலையில், ஆனந்தூரில் நடக்கும் திருமண நிகழ்ச்சிக்கு பங்கேற்பதற்காக கடந்த மாதம் 23-ம் திகதி விசா அனுமதியை ரத்து செய்துவிட்டு விமானம் மூலம் இந்தியா திரும்ப இருந்தார்.

விமான நிலையம் வருவதற்காக கடந்த 21-ம் திகதி பட்டர்வொர்த்திலிருந்து பேருந்தில் கிளம்பிய முகம்மது யாசீன் மறுநாள் காலை கோலாலம்பூர் வந்துவிட்டதாக தனது தாயாருக்கு போன் மூலம் தகவல் தெரிவித்துள்ளார்.

ஆனால் அதன் பின் அவரைத் தொடர்புகொள்ள முடியவில்லை. விமான நிலையத்திற்கும் வந்தததாக தகவல் இல்லை.

இதனால் பதறிய அவருடைய பெற்றோர் மலேசியாவில் உள்ள உறவினர்கள் மூலம் முகம்மது யாசீன் காணாமல் போனது குறித்து மலேசிய காவல்துறையில் புகார் அளித்துள்ளனர்.

இந்நிலையில், யாசீன் இன்று ஆனந்தூர் திரும்பியுள்ளார். யாசீன் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து விமானம் மூலம் இந்தியா திரும்ப இருந்த நிலையில் கோலாலம்பூர் பொலிசார் அவரைச் சந்தேகத்தின் பேரில் பிடித்துச் சென்று ஒரு வாரம் விசாரணை நடத்தியுள்ளனர்.

இது குறித்து தகவல் அறிந்த யாசீனின் உறவினர் நைனா முகம்மது பொலிசாரிடம் உரிய விளக்கம் அளித்து யாசீனை மீட்டு வந்துள்ளார்.

பொலிசாரிடம் இருந்து மீட்கப்பட்ட யாசீன் இன்று தனது சொந்த ஊரான ஆனந்தூருக்கு திரும்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்