கர்ப்பிணியாக இருக்கும் நான் இறப்பதற்கு அனுமதி கொடுங்கள்: 17 வயது பெண்ணின் கோரிக்கை

Report Print Deepthi Deepthi in இந்தியா
1227Shares
1227Shares
ibctamil.com

கொல்கத்தாவின் 17 வயது இளம்பெண் ஒருவர் தான் கர்ப்பமாக இருப்பதால் நான் இறந்துபோவதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என பொலிசாரிடம் மனு அளித்துள்ளார்.

17 வயது பெண்ணை நபர் ஒருவர் கற்பழித்த காரணத்தால், அவர் கர்ப்பமாகியுள்ளார். ஆனால், அந்நபரோ நானே உன்னை திருமணம் செய்துகொள்கிறேன் என உறுதி அளித்த காரணத்தால், பாதிக்கப்பட்ட பெண் தனது தாயுடன் வசித்து வந்துள்ளார்.

ஆனால், திடீரென அந்த ஆணின் பெற்றோர், இந்த திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் மனமுடைந்த அப்பெண், மாவட்ட பொலிசிடம் சென்று, நான் கர்ப்பமாக இருக்கிறேன்...நான் இறந்துபோக எனக்கு அனுமதி அளியுங்கள்.

ஏனெனில், எனக்கு குழந்தை பிறந்ததால் அக்குழந்தையின் எதிர்காலம் நினைத்து அச்சமாக இருக்கிறது என மனு அளித்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து, பொலிசார் பாதிக்கப்பட்ட பெண் மற்றும் அந்த ஆணின் பெற்றோரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்