கத்தி முனையில் பிரபல ரவுடியை கடத்திய மர்ம நபர்கள்

Report Print Fathima Fathima in இந்தியா
172Shares
172Shares
ibctamil.com

ஓசூரில் பிரபல ரவுடியை கடத்தி சென்ற மர்ம கும்பலை பொலிசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

ஓசூர் சமத்துவபுரத்தை சேர்ந்தவர் பிரேம் நவாஸ், பிரபல ரவுடியான பிரேம் உணவு விடுதியொன்றை நடத்தி வருகிறார்.

கடந்த 2008ம் ஆண்டு தேன்கனிக்கோட்டை ரியல் எஸ்டேட் அதிபர் கொலை வழக்கிலும், 2012ம் ஆண்டு இரும்பு வியாபாரி முஸ்தாக் கொலை வழக்கிலும் தேடப்படும் முக்கிய குற்றவாளியாவார்.

இதுதவிர பிரேம் மீது பல்வேறு வழக்குகளும் உள்ளன, இந்நிலையில் நேற்று பிரேம் நவாஸ் வீட்டுக்கு சொகுசு காரில் வந்த மர்ம நபர்கள் கத்தி முனையில் கடத்திச் சென்றனர்.

அவர்கள் வந்த இரண்டு காரில் ஒரு கார் பழுதடையவே, நடுரோட்டில் விட்டுச் சென்றுள்ளனர்.

இத்தகவல் பொலிசுக்கு தெரியவர, விரைந்து சென்ற அதிகாரிகள் காரை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

பிரேமை கடத்தியது யார்? முன்விரோதம் காரணமா என பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்