ஜெ. மரணம்: திவாகரனின் பரபரப்பு பேச்சு... அப்போலோ மருத்துவமனை விளக்கம்

Report Print Arbin Arbin in இந்தியா
305Shares

ஜெயலலிதா மரணம் குறித்து அப்போலோ மருத்துவமனை விளக்கம் அளித்துள்ளது. ஜெயலலிதா 5ம் திகதி தான் உயிரிழந்தார் என்றும் அப்போலோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

தமிழக முனாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு டிசம்பர் 4ஆம் திகதியன்று இதய முடக்கம் ஏற்பட்டதாக அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகத்தினரால் தகவல் வெளியிடப்பட்டது.

இதனையடுத்து அவருக்கு எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டது. அப்போதே மிகப்பெரிய அதிர்ச்சி தொண்டர்களிடையே ஏற்பட்டது.

2016 ஆம் ஆண்டு செப்டம்பர் 22 ஆம் திகதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜெயலலிதா உடல் நலம் தேறி வந்தார்.

டிசம்பர் 5 ஆம் திகதியன்று இரவு 11 மணிக்கு அவர் மரணமடைந்ததாக அப்பல்லோ நிர்வாகம் செய்தி வெளியிட்டது.

ஆனால் இன்று மன்னார்குடியில் நடைபெற்ற எம்.ஜி.ஆர் பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்டு பேசிய சசிகலா சகோதரர் திவாகரன்,

2016 டிசம்பர் 4ம் திகதி மாலை 5.15 மணிக்கே மாரடைப்பால் ஜெயலலிதா இறந்து விட்டார் என்று கூறியிருந்து குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்