எல்லாவற்றையும் இழப்பீர்கள்: குடும்பத்தினரை கடிதம் மூலம் எச்சரித்த சசிகலா

Report Print Raju Raju in இந்தியா

தமிழக அரசியலில் சசிகலா குடும்பத்தை சேர்ந்தவர்கள் ஆளாலுக்கு தலைத்தூக்கி வரும் நிலையில் அவர்களுக்கு சசிகலா கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

ஆர்.கே நகர் தேர்தலில் டிடிவி தினகரன் வெற்றி பெற்ற பின்னர் தமிழக அரசியலில் சசிகலா குடும்பத்தினரின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது.

டிடிவி தினகரன், சசிகலாவின் கணவர் நடராஜன், சசிகலாவின் தம்பி திவாகரன், அவரது மகன் ஜெய் ஆனந்த் ஆகியோர் இதனை உறுதிப்படுத்தும் விதமாக நாள்தோறும் ஏதாவது பேசி செய்திகளில் இடம்பிடித்து வருகின்றனர்.

ஜெயலலிதா டிசம்பர் 4ஆம் திகதியே இறந்துவிட்டார் என திவாகரன் சமீபத்தில் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

அதே போல மாவீரன் சுபாஷ்சந்திரபோஸ் மக்கள் பணியகம் என்ற அமைப்பை பொங்கல் அன்று ஜெய் ஆனந்த் தொடங்கியுள்ளார்.

இவற்றையெல்லாம் தனது வழக்கறிஞர் மூலம் கேட்டறிந்த சசிகலா அவர்களை எச்சரிக்கும் வகையில் கடிதம் ஒன்றை எழுதி அனுப்பியுள்ளார்.

அதில் கடுமையான வார்த்தைகளை சசிகலா பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. குடும்ப அரசியல் செய்துள்ள சசிகலா தமிழகம் முழுவதும் ஊருக்கு ஒருவரை தலைமையாக்கி கட்சியை கைப்பற்றியுள்ளதாக மத்திய உளவுத்துறை ரிப்போர்ட் அனுப்பி இருக்கிறது.

இதன் பின்னணியில் தான் ரெய்டு உள்பட பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகிறோம். அவர்கள் சொல்வது போல ஆளாளுக்கு நீங்கள் இப்படி ராஜ்ஜியம் செய்து வந்தால் நான் காலம் முழுவதும் உள்ளேயே கிடக்க வேண்டியது தான் என்று சசிகலா குறிப்பிட்டுள்ளார்.

இனிமேல் யாரும் தேவையில்லாமல் மீடியாவை சந்திக்க வேண்டாம் எனவும் தேவையில்லாமல் யாரிடமும் எதையும் பேச வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளார்.

இதற்கு மேலும் நீங்கள் நான் சொல்வதை கேட்கவில்லை என்றால் உங்களிடம் இருக்கும் அனைத்தையும் நீங்கள் இழக்க வேண்டிய நிலைமை ஏற்படும் என கடிதத்தில் சசிகலா எச்சரித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்