கவிஞர் வைரமுத்து- ஆண்டாள் விவகாரம்: பழ.நெடுமாறன் கொந்தளிப்பு

Report Print Arbin Arbin in இந்தியா

ஆண்டாள் தொடர்பான சர்ச்சையில், பழ.நெடுமாறன் கவிஞர் வைரமுத்துவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பில், தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கையில், ஆண்டாளின் பெருமைகுறித்து கவிஞர் வைரமுத்து ஆற்றிய உரையில் காட்டிய மேற்கோள், தங்கள் உள்ளத்தைப் புண்படுத்துவதாகச் சிலர் சுட்டிக்காட்டிக் கண்டித்தபோது, அவரும் உடனடியாக வருத்தம் தெரிவித்துவிட்டார்.

அவரது உரையை வெளியிட்ட நாளிதழும் ஒருமுறைக்கு இருமுறை வருத்தம் தெரிவித்துவிட்டது.

அதை ஏற்பதுதான் பெருந்தன்மையாகும். ஆனால், அப்பிரச்னையை மேலும் ஊதிப் பெருக்குவது பண்பாடற்ற செயலாகும் என்று குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக ஆண்டாள் குறித்து கவிஞர் வைரமுத்து எழுதிய கட்டுரை சர்ச்சையில் சிக்கியது. அவருக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல இடங்களில் அவர்மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளன.

அதேசமயம், அவர்மீதான வழக்குகளை விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்