மகனை கொன்றது ஏன்? பெற்ற தாயின் அதிரவைக்கும் வாக்குமூலம்

Report Print Fathima Fathima in இந்தியா

கேரளாவில் பெற்ற மகனை தாயே எரித்துக் கொன்ற சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவை சேர்ந்த ஜான்- ஜெயமோல் தம்பதியின் மகன் ஜித்து(வயது 14), கடந்த திங்கட்கிழமை முதல் காணாமல் போன ஜித்துவை பற்றி எந்த தகவலும் தெரியவில்லை.

இதன்பின்னர் பொலிசார் நடத்திய விசாரணையில் ஜெயமோல் மகனை கொன்றதை ஒப்புக்கொண்டார்.

அவர் அளித்துள்ள வாக்குமூலத்தில், எங்களுக்கும், என் கணவரின் குடும்பத்தினருக்கும் இடையே சொத்து தகராறு இருந்து வந்தது.

அதனால் தாத்தா, பாட்டியை பார்க்க செல்லக்கூடாது என கூறியிருந்தேன், ஆனால் என் பேச்சை கேட்காமல் அவர்களை அடிக்கடி பார்த்து விட்டு வந்தான்.

சம்பவதினத்தன்று அவர்களை பார்த்துவிட்டு மாலை 6 மணியளவில் வீட்டுக்கு வந்தான், தாத்தா, பாட்டி நமக்கு சொத்து தரும் எண்ணத்தில் இல்லை என்று கூறினார்.

இதனால் கடும் கோபமடைந்த நான், அவனது தலையை சுவற்றில் மோதி காயப்படுத்தினேன், மயங்கி விழுந்த சித்துவை மண்ணெண்ணெய் ஊற்றி எரித்தேன்.

அரை மணிநேரம் கழித்து எரிந்து போன உடல் பாகங்களை எடுத்து தோட்டத்தில் புதைத்தேன் என கூறியுள்ளார்.

இதற்கிடையே தங்களுக்கும், தனது பெற்றோருக்கும் இடையே சொத்து தகராறு ஏதுமில்லை என ஜான் கூறியுள்ளார், அவரது பெற்றோரும் இதையே கூறியுள்ளனர்.

தனக்கு பிடிக்காத ஒன்றை செய்ததற்காக ஜெயமோல் இவ்வாறு செய்திருக்கலாம் என பொலிசார் சந்தேகிக்கின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்