நான் அவளை உயிருக்கு உயிராக காதலிக்கிறேன்: நள்ளிரவில் ஐ.டி மாணவன் ஓட, ஓட விரட்டி படுகொலை

Report Print Santhan in இந்தியா

தமிழகத்தில் ஐ.டி மாணவர் ஒருவர் காதல் விவகாரத்தால் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை நுங்கம்பாக்கம் அப்பு தெருவை சேர்ந்த ரமேஷ் என்பவரின் மகன் ரஞ்சித்(19). இவர் கிண்டியில் உள்ள தனியார் ஐ.டி.ஐ. கல்லூரியில் மெக்கானிக் பிரிவில் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார்.

இந்நிலையில் இவர் நேற்றுமுன்தினம் நள்ளிரவு கழுத்து அறுக்கப்பட்ட குளக்கரை சாலையில் மர்மான முறையில் இறந்து கிடந்துள்ளார்.

இது குறித்த தகவல் பொலிசாருக்கு தெரியவந்தால், இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கொலை நடந்த இடத்தில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆராய்ந்து வந்த நிலையில், மாணவனின் போனை ஆய்வு செய்துள்ளனர்.

அப்போது அவருடைய போனில் ஆடியோ உரையாடல் பதிவு செய்யும் வசதி இருந்துள்ளது. இதனால் சம்பவத்தன்று வந்த உரையாடலை போலிசார் ஆராய்ந்த போது, கொலை செய்யப்படுவதற்கு 2 மணி நேரத்துக்கு முன்பு அதில் பேசிய நபர், அந்த பெண்ணை விட்டுவிடு, நான் அவளை உயிருக்கு உயிராக காதலிக்கிறேன். நீ விடவில்லை என்றால் உன் கழுத்தை அறுத்துக் கொன்று விடுவேன்’ என்று மிரட்டல் விடுத்திருப்பது தெரியவந்தது.

இதன் மூலம் காதல் விவகாரத்தால் ரஞ்சித் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும், செல்போனில் மிரட்டல் விடுத்த நபர் தான் அவரை தீர்த்துக்கட்டியிருக்க வேண்டும் என்றும் பொலிசார் சந்தேகம் அடைந்துள்ளனர். அதன்பேரில் செல்போனில் பேசிய நபரை பொலிசார் தேடி வருகின்றனர்.

மேலும் குளக்கரை சாலை 2-வது தெருவில் இருந்து சம்பவம் நடைபெற்ற பகுதி வரை ரத்தம் சிதறி இருந்ததால் வாலிபரை ஓட, ஓட விரட்டி கொடூரமாக படுகொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்