மருத்துவரை மயக்கி வைத்துள்ள நித்யானந்தா: பெற்றோர்கள் கதறல்!

Report Print Harishan in இந்தியா
692Shares

தமிழகத்தில் பெற்ற மகனை நித்யானந்தா மயக்கி வைத்துள்ளதாக நித்தி அசிரமத்தின் முன்பு தம்பதியர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழகத்தின் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த காந்தி(வயது 63) என்னும் நபரின் மகனான மனோஜ்குமார்(வயது 30) என்பவர் மருத்துவம் படித்து அரசு சுகாதார நிலையத்தில் மருத்துவராக பணியாற்றி வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்னர் மதுரையில் நித்யானந்தா நடத்திய தியான பயிற்சியில் கலந்து கொள்வதற்காக மருத்துவர் மனோஜ் சென்றுள்ளார்.

அதன்பின் மனோஜ் வீடு திரும்பவில்லை. அதேபோல் மனோஜின் மூத்த சோகதரி வனிதா கூறுகையில், நானும் எனது 17 வயது மகள் நிவேதாவும் மதுரையில் நடந்த நித்யானந்தாவின் தியான பயிற்சிக்கு சென்றோம்.

அப்போது, ஒரு மாத சிறப்பு தியான பயிற்சி என திருவண்ணாமலைக்கு எங்களை அழைத்து வந்தனர். அதற்காக, ரூ.3 லட்சம் செலுத்தினோம். சில நாட்களுக்கு பிறகு, என் தந்தைக்கு உடல் நலக்குறைவு காரணமாக ஊருக்கு சென்றுவிட்டேன். பின்னர், என் மகளை அழைத்துச் செல்ல வந்தேன். ஆனால், அவளை என்னுடன் அனுப்ப மறுத்துவிட்டனர். என் மகளை போல, சுமார் 50 பேர் ஆசிரமத்தில் உள்ளனர் என கூறியுள்ளார்.

இந்நிலையில் ஆண்டாள் குறித்து வைரமுத்துவின் கருத்திற்கு கண்டனம் தெரிவித்து அவரது பெண் சீடர்கள் சிலர் வெளியிட்ட அறுவறுக்கத்தக்க வீடியோக்களை பார்த்த மனோஜின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தன் மகன் மற்றும் பேத்தியும் இப்படித்தான் உள்ளார்களோ என எண்ணிய மனோஜின் தந்தை, கடினப்பட்டு விவசாயம் செய்து மகனை மருத்துவம் படிக்க வைத்தேன்.

எனது மகன் மற்றும் மகள் வழி பேத்தி நிவேதா இருவரையும் மீட்டுத் தர வேண்டும் என திருவண்ணாமலையில் உள்ள நித்யானந்தா அசிரம முகப்பில் அமர்ந்து காந்தி மற்றும் அவரது மனைவி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும், மனோஜ் இங்கில்லை. அவர் பெங்களூரு மடத்தில் தீட்சை பெற்று சீடராக மாறிவிட்டார் என கூறி அவர்களை விரட்ட முயன்ற நித்யானந்தா சீடர்களிடம் இருந்து அவர்களை மீட்டு பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்