விவசாயியை ட்ராக்டரால் நசுக்கி கொன்ற நிதி நிறுவன அதிகாரிகள்

Report Print Arbin Arbin in இந்தியா

இந்தியாவின் உத்திரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்த விவசாயி ஒருவரை, தனியார் நிதி நிறுவனத்தை சேர்ந்த அதிகாரிகள், ட்ராக்டரால் நசுக்கி கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சில வருடங்களுக்கு முன்பு, 45 வயதான கியான் சந்திரா, தனியார் நிதி நிறுவனத்திடம் இருந்து 50,0000 ரூபாய் கடன் வாங்கியுள்ளார்.

இந்த கடனில் இன்னும் 125,000 மட்டுமே திருப்பி செலுத்த வேண்டியிருந்தது. அதிலும் கடந்த ஜனவரி 10ம் திகதி 35000 ரூபாயை கியான் சந்திரா செலுத்தியுள்ளார், மீதி தொகையை சில வாரங்களில் தருவதாக கூறியிருக்கிறார்.

ஆனால், இரண்டு நாட்களுக்கு முன்னர் சிதாபூரில் உள்ள நிலத்தில் கியான் சந்திரா வேலை பார்த்துக்கொண்டிருக்கும்பொழுது வந்த நிதி நிறுவன அதிகாரிகள், அவரது ட்ராக்டர் சாவியை வலுக்கட்டாயமாக பறித்தனர். இதனால், கியான் சந்திராவிற்கும், கடன் மீட்புக் குழுவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

வாக்குவாதத்தின் முடிவில், ட்ராக்டரின் அருகில் விவசாயியை கடன் மீட்புக்குழுவில் இருந்த முகவர் ஒருவர் தள்ளிவிட்டார். அப்பொழுது கண் இமைக்கும் நொடியில், டிராக்டரால் நசுக்கப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார் விவசாயி.

கியான் சந்திராவிடம் 2.5 ஏக்கருக்கு மேலாக நிலம் இருந்தும், தனது குடும்பத்தை நடத்துவதற்கு, சில வசதி பெற்ற விவசாயிகளின் நிலத்தில் வேலை செய்வார் என்று குடும்பத்தினர் தெரிவித்தனர்.

இதனிடையே, குற்றவாளிகள் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் விரைவில் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்றும் காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்