தாலி கட்டும் நேரத்தில் மாப்பிள்ளை செய்த செயல்: தந்தை வேதனை

Report Print Harishan in இந்தியா
861Shares
861Shares
ibctamil.com

திருமணத்தன்று வரதட்சனையில் 10 சவரன் நகை குறைவாக இருந்ததால் மாப்பிள்ளை தலைமறைவாகியுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தின் திருவள்ளூர் மாவட்டத்தில் வசிக்கும் ஜானகிராமன் என்பவர் தன் மகளுக்கு திருமணம் செய்ய ஏற்பாடுகளை செய்துள்ளார்.

ஜானகிராமன் பார்த்த மாப்பிள்ளையின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், திருமணத்தின் வரதட்சனையாக 50 சவரன் நகை, 2 எல்.ஈ.டி டீவி, ஏசி உள்ளிட்டவற்றை கோரியுள்ளனர்.

அதற்கு ஜானகிராமன் சம்மதம் தெரிவித்த நிலையில் திருமணத்திற்கான ஏற்பாடுகள் பிரமாண்டமாக நடைபெற்றுள்ளது.

இந்நிலையில் மாப்பிள்ளை வீட்டார் கோரிய 50 சவரனில் 10 சவரன் நகை மட்டும் ஏற்பாடு செய்ய முடியாததால் ஜானகிராமன் கால அவகாசம் கோரியுள்ளார்.

அதை ஏற்க மறுத்த மாப்பிள்ளை, தாலி கட்டுவதற்கு சிறிது நேரத்திற்கு முன் தலைமறைவாகியுள்ளார்.

உடனடியாக ஆத்திரம் அடைந்த பெண் வீட்டார், மணமகன் தந்தை மற்றும் குடும்பத்தினரை பிடித்து பொலிசில் ஒப்படைத்துள்ளனர்.

மேலும், 50 லட்சம் வரை செலவு செய்து மகளின் திருமணத்தை நடத்தி பார்க்க முடியவில்லையே என மிகுந்த மன வலியுடன் ஜானகிராமன் கூறிவருவது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்