7 மாத குழந்தையின் வயிற்றில் எல்.இ.டி பல்ப்

Report Print Raju Raju in இந்தியா

மும்பையில் எல்.இ.டி விளக்கை ஏழு மாத பெண் குழந்தை விழுங்கிய நிலையில் பல்வேறு கட்ட சிகிச்சைக்கு பின்னர் மருத்துவர்கள் அதை வெளியில் எடுத்து குழந்தையை காப்பாற்றியுள்ளனர்.

ரத்னகிரியை சேர்ந்த தம்பதிக்கு அரிபா கான் என்ற ஏழு மாத பெண் குழந்தை உள்ளது. சமீபத்தில் பொம்மை செல்போனை வைத்து அரிபா விளையாடி கொண்டிருந்த போது அதிலிருந்த இரண்டு செண்டிமீட்டர் கொண்ட எல்.இ.டி விளக்கை வாயில் போட்டு விழுங்கியுள்ளார்.

விளக்கானது அரிபாவின் வலது பக்க நுரையீரலில் சிக்கி கொண்டுள்ளது. இந்நிலையில் அவளுக்கு காய்ச்சல் மற்றும் இருமல் ஏற்பட பெற்றோர் அருகிலிருந்த மருத்துவமனைக்கு அரிபாவை அழைத்து சென்றுள்ளனர்.

ஆனால் மருத்துவரால் அரிபாவின் பிரச்சனையை சரியாக கண்டுப்பிடிக்க முடியாத நிலையில் உறவினர்கள் ஆலோசனைபடி பாய் ஜெர்பாய் வாடியா என்ற பெயரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கூட்டி சென்றார்கள்.

அங்கு அரிபாவுக்கு எக்ஸ்-ரே எடுத்தபோது வலதுபக்க நுரையீரலில் ஏதோ ஒரு பொருள் இருப்பது தெரிந்தது.

அப்போது தான் இந்த விடயமே அரிபாவின் பெற்றோருக்கு தெரிந்தது.

பின்னர் பல்வேறு கட்ட சிகிச்சைக்கு பின்னர் எல்.இ.டி விளக்கு நுரையீரலில் இருப்பதை மருத்துவர்கள் கண்டுப்பிடித்தார்கள்.

ஆனால் குழந்தை காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்ததால் ஒருவாரம் கழித்தே அறுவை சிகிச்சையை மருத்துவர்கள் தொடங்கினார்கள்

இதையடுத்து அறுவைசிகிச்சை மூலம் கத்திரிக்கோல் உதவியுடன் விளக்கை மருத்துவர்கள் வெளியில் எடுத்தனர்.

நுரையீரலில் இருந்த பொருளை சுற்றி அதிகளவில் திசுக்கள் இருந்ததால் அதை நீக்க கொஞ்சம் சிரமப்பட வேண்டியிருந்தது என மருத்துவர்கள் கூறியுள்ளார்கள்.


மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்