பெயர் சூட்டிவிட்டார் கமல்ஹாசன்

Report Print Deepthi Deepthi in இந்தியா

நடிகர் கமல்ஹாசன் தனது சுற்றுப்பயணத்துக்கு ‘நாளை நமதே’ என்று பெயர் சூட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் ஒரு கவிதையை தனது குரலில் ஆடியோவாக வெளியிட்டுள்ளார்.

நாளை நமதே....

நேற்றையும் இன்றையும் ஆய்ந்து அறிந்தால்

நாளை நமதே....

பார்த்ததை பயின்றதை பழகி நடந்தால்

நாளை நமதே....

நிலவும் நீரும் பொதுவென புரிந்தால்

நாளை நமதே....

எனக்கே எனக்கென முந்தா திருந்தால்

நாளை நமதே...

மூத்தோர் கடமையை இளையோர் செய்தால்

நாளை நமதே...

அனைவரும் கூடி தேரை இழுத்தால்

நாளை நமதே....

சலியா மனதுடன் உழைத்து வாழ்ந்தால்

நாளை நமதே...

முனைபவர் கூட்டம் பெருகிவிட்டால்

நாளை என்பது நமதே நமதே....

கிராமியமே நம் தேசியம் என்றால்

நாளை நமதே... வெற்றியும் நமதே...

தமிழர் தமிழால் இணைக்கப்பட்டால்

நாளை நமதே... நிச்சயம் நமதே....

நாளை நமதே.... நாளை நமதே...

இவ்வாறு கமல்ஹாசன் கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்