திருமணமான இரண்டு மாதத்தில் தூக்கில் தொங்கிய புதுப்பெண்

Report Print Raju Raju in இந்தியா

சென்னையில் திருமணமான இரண்டு மாதத்தில் வரதட்சணை கொடுமையால் புதுப்பெண் தற்கொலை செய்து கொண்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மடிப்பாக்கத்தை சேர்ந்தவர் விஷ்ணுபரத் (28) இவரின் மனைவி ஷாலினி (26). ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர்களான இருவருமே மருத்துவர்கள் ஆவார்கள்.

தம்பதிக்கு இரண்டு மாதங்களுக்கு முன்னர் தான் திருமணம் நடந்தது.

இந்நிலையில் திருமணத்தின் போது தருவதாக கூறப்பட்ட ரூ.5 லட்சத்தை கேட்டு ஷாலினியை, விஷ்ணுபரத் கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது.

இதனால் விரக்தியில் இருந்த ஷாலினி நேற்று முன்தினம் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஷாலினி இறந்த செய்தி கேட்டு சென்னை வந்த அவருடைய பெற்றோர் மற்றும் உறவினர்கள் வரதட்சணை கொடுமையால் ஷாலினி இறந்ததாகவும், அவர் சாவில் மர்மம் இருப்பதாகவும் ஆர்.டி.ஓ.விடம் புகார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.


மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers