இதயம் பலவீனமானவர்கள் பார்க்க வேண்டாம்!

Report Print Fathima Fathima in இந்தியா

ராஜஸ்தானில் பெற்ற குழந்தையை தலைகீழாக தொங்கவிட்டு தந்தை தாக்கும் பகீர் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.

ராஜஸ்தானின் ராஜாசமாத்தை சேர்ந்தவர் ஜெயின் சிங், இவருக்கு 5 வயதில் ஒரு மகனும், 3 வயதில் ஒரு மகளும் உள்ளனர்.

இந்நிலையில் தனது இரு குழந்தைகளையும் ஜெயின் சிங் அடித்து துன்புறுத்தும் வீடியோ வெளியாகியுள்ளது.

அதில், 5 வயது மகனை கட்டித் தொங்கவிட்டுள்ளார், 3 வயது மகளையும் கொடூரமாக அடிக்கும் போது வலியால் அக்குழந்தை கதறி அழுகிறது.

இச்சம்பவத்தை ஜெயின் சிங்கின் சகோதரர் வீடியோவாக எடுத்துள்ளார், இது வைரலாகவே பொலிசார் இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விசாரணையில், இருவரும் மண்ணில் விளையாடி ஆடையை அசுத்தமாக்கியதால் அடித்ததாக கூறியுள்ளார்.

ஜெயின் சிங்குக்கு பயந்து குழந்தைகளின் தாய் உட்பட அனைவரும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது தெரியவந்துள்ளது.

வீடியோவை காண

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers