80 போலி நிறுவனங்கள்: ரூ.4,500 கோடி சொத்து சேர்த்த சசிகலா

Report Print Arbin Arbin in இந்தியா

சசிகலா குடும்பத்தினருக்கு சொந்தமான ரூ.4,500 கோடி மதிப்பிலான சொத்துகளை கையகப்படுத்த வருமான வரித் துறை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த சொத்துகள் தொடர்பில் 3 மாதத்துக்குள் விளக்கம் அளிக்கவும் சசிகலா குடும்பத்தாரிடம் உத்தரவிட்டுள்ளது.

செயல்படாத நிறுவனங்களின் பெயரில் சசிகலா குடும்பத்தினருக்கு இத்தகைய சொத்துகள் உள்ளது என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மேலும் பினாமி சொத்துகள் தடுப்பு சட்டத்தின் கீழ் சொத்துகளை கையகப்படுத்தவும் வருமான வரித் துறை திட்டமிட்டுள்ளது.

குற்றம் நிரூபணமானால் 7 ஆண்டுகள் சிறை தண்டனை வரை கிடைக்கக் கூடும் எனவும் கூறப்படுகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers