சாலையில் உருண்டுவந்த மனிதத் தலை: பொதுமக்கள் அதிர்ச்சி

Report Print Fathima Fathima in இந்தியா
258Shares
258Shares
lankasrimarket.com

காஞ்சிபுரத்தில் பேருந்துக்காக மக்கள் காத்துக் கொண்டிருந்த போது சாலையில் உருண்டோடி வந்த மனித தலையால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

காஞ்சிபுரத்தின் சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது காட்டாங்கொளத்தூர்.

இங்கேயுள்ள பேருந்து நிறுத்தத்தில் மக்கள் காத்திருந்தனர், அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள், தாங்கள் வைத்திருந்த பையை குப்பைத் தொட்டியில் வீசினர்.

இப்பையில் இருந்து மனித தலையொன்று வெளியே வந்த விழுந்ததால் மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

உடனடியாக மறைமலைநகர் பொலிசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது, விரைந்து வந்த பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இறந்தவர் கோனாதி கிராமத்தை சேர்ந்த பாலாஜியாக இருக்கலாம் என அங்கிருந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

பழிக்குபழி வாங்கும் நோக்கில் இக்கொலை நடந்திருக்கலாம் என பொலிசார் சந்தேகிக்கின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்