அப்பாவை தீர்த்துக்கட்ட திட்டம் தீட்டிய மகன்: பகீர் கிளப்பிய சம்பவம்

Report Print Harishan in இந்தியா
185Shares
185Shares
Lankasri Market

அரசு வேலைக்காக கூலிப்படையினருடன் சேர்ந்து மகனே அப்பாவைக் கொலை செய்ய திட்டமிட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தின் சென்னை பூந்தமல்லி பகுதியில் வசித்து வருபவர்கள் சுதாகர், விவேக்.

விவேக்கின் அப்பா நசரதப்பேட்டை பொலிஸ் நிலையத்தில் பணியாற்றி வருகிறார். அம்மா, சென்னை குற்றப்பிரிவு பொலிசில் சப்- இன்ஸ்பெக்டராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

பாதியில் படிப்பை நிறுத்திய விவேக், பல கம்பெனிகளில் பணியாற்றி வந்த நிலையில் மூன்று லட்சம் ரூபாய் கடன் ஏற்பட்டுள்ளது, கடனை அடைக்க தன் நண்பரான சுதாகரிடம் ஐடியா கேட்டுள்ளார்.

சுதாகர், சென்னை மாநகராட்சியில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். தனக்கு அறிமுகமான ஜோஸ், செல்வக்குமார் என இரண்டு ரவுடிகளின் உதவியோடு வழிப்பறியில் ஈடுபட்டு கடனை அடைத்துவிடலாம் என விவேக்கிற்கு தைரியம் கொடுத்துள்ளார் சுதாகர்.

இதுகுறித்து பிடிபட்ட ரவுடிகள் ஜோஸ், செல்வக்குமார் உள்ளிட்டோரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் மற்றொரு திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது, விவேக்கின் அப்பா சரிவர குடும்பத்தை கவனிக்கவில்லை, நிரந்தர வேலை இல்லாமல் விவேக் கஷ்டபட்டு கொண்டிருக்கிறார்.

விவேக்கின் தந்தையை தீர்த்துக் கட்டினால் அந்த வேலையை உனக்கு வாங்கிவிடலாம் என சுதாகர் கூறியதை ஏற்று விவேக்கும் கொலைக்கு சம்மதம் தெரிவித்ததன் அடிப்படையில் கொலை திட்டம் தீட்டியதாக ரவுடிகள் வாக்குமூலம் வழங்கியுள்ளனர்.

இதனை மறுத்த பொலிசார், கைது செய்யப்பட்ட நான்கு பேர் மீதும் வழிப்பறி செய்ய திட்டம் தீட்டியதாக ஒரு வழக்கு மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்