நான் அவ்வளவு பெரிய ரவுடி இல்லை.. என்னை விட்டுறுங்க: கண்ணீர் விட்டு கதறிய தாதா பினு

Report Print Santhan in இந்தியா

என்கவுண்டரில் தேடப்பட்டு வந்த பிரபல ரவுடி பினு, நான் அவ்வளவு பெரிய ரவுடி இல்லை, நான் ஒரு சர்க்கரை நோயாளி என்று கண்ணீர் விட்டு கதறிய வீடியோ வெளியாகியுள்ளது.

சென்னையைச் சேர்ந்த பிரபல ரவுடியான பினு கடந்த 6-ஆம் திகதி தன்னுடைய பிறந்த நாளை மாங்காடு மலையம்பாக்கத்தில் பல ரவுடிகளுடன் கொண்டாடினான்.

இதுகுறித்த தகவல் பொலிசாருக்கு தெரியவந்ததால், அப்பகுதியை சுற்றி வளைத்த பொலிசார் 75 ரவுடிகளை கைது செய்தனர்.

இந்த கைது நடவடிக்கையின் போது பினு தப்பியோடிவிட்டதால், அவன் உட்பட 100 பேரை பொலிசார் தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.

இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தின் நோக்கமே பிரபல ரவுடி ராதா கிருஷ்ணனை ஒழிக்க வேண்டும் என்பதற்காக நடத்தப்பட்டதாகவும், அதனால் சமீபகாலமாக சென்னையில் ஓய்ந்திருந்த ரவுடிகள் மோதல் தற்போது மீண்டும் தலை தூக்க துவங்கியுள்ளதாகவும் செய்திகள் வெளியானது.

அதைத் தொடர்ந்து தப்பியோடிய பினு மற்றும் கூட்டாளிகளை தேவைப்பட்டால் சுட்டு பிடிக்கவும் பொலிசார் திட்டமிட்டிருந்த நிலையில், நேற்று இரவு ரவுடி பினு பொலிசாரிடம் சரணடைந்தான்.

இந்நிலையில் சரணடைந்த பின் அவன் பேசிய தொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது. அதில் அவன் நான் பெரிய ரவுடி இல்லை, சர்க்கரை நோயாளி மற்றவர்களின் வேண்டுகோளுக்கினங்கவே பிறந்த நாள் கொண்டாட சென்னை வந்ததாக கண்ணீர் விட்டு கூறியுள்ளான்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்