சூட்கேசில் அடைக்கப்பட்ட நிலையில் 7 வயது சிறுவனின் சடலம்: உறவினர் கைது

Report Print Arbin Arbin in இந்தியா
299Shares
299Shares
ibctamil.com

இந்திய தலைநகர் டெல்லியில் 7 வயது சிறுவனை கடத்தி கொலை செய்து உடலை சூட்கேசில் அடைந்து வீசிய உறவினர் கைது செய்யப்பட்டுள்ளார்.

டெல்லி சுவரப் நகர் பகுதியில் இருந்து ஒரு சூட்கேஸ் கண்டெடுக்கபட்டது. அதில் 7 வயது மதிக்க தக்க சிறுவனின் சடலம் இருந்தது.

இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட பொலிசார் குறித்த சிறுவன் ஒரு மாதத்திற்கு முன் கடத்தப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பாக உறவினர் அவிதேஷ் என்பவரை பொலிசார் கைது செய்து உள்ளனர். அவிதேஷ் சிறுவனை கடத்தி கொலை செய்து உடலை சூட்கேசில் வைத்து உள்ளார்.

அவிதேஷ் ஒரு யுபிஎஸ்சி தேர்ச்சி பெற்றவர் சிவில் சர்வீஸ் தேர்விற்கு தயாராகி வருவதாக கூறி உள்ளார்.

குழந்தையை கடத்தி வைத்து கொண்டு அந்த குடும்பத்துடன் இருந்தே நாடகமாடி உள்ளார். புகார் கொடுப்பதிலும் குழந்தையை தேடுவது போல் நடித்தும் உள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்