நியாயம் கிடைத்தது: கதறிய ஹாசினியின் தந்தை- நெஞ்சை உருக்கும் வீடியோ

Report Print Fathima Fathima in இந்தியா
2295Shares
2295Shares
lankasrimarket.com

பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சிறுமி ஹாசினி கொலை வழக்கில் குற்றவாளி தஷ்வந்துக்கு மரண தண்டனை விதித்து நீதிபதி வேல்முருகன் உத்தரவிட்டுள்ளார்.

இத்தீர்ப்பை கண்ணீர் மல்க ஹாசினியின் தந்தை வரவேற்றுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், எனது மகளின் மரணத்திற்கு நியாயம் கிடைத்துவிட்டது, நீதிமன்ற தீர்ப்பால் எனது போராட்டத்திற்கு வெற்றி கிடைத்துள்ளது.

இனிமேல் யாரும் இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடக்கூடாது, கடந்த ஒரு வருடமாக தூக்கமில்லாமல் தவித்தேன், இந்த தீர்ப்பால் மற்ற எவரும் குற்றம் புரிய பயப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

தீர்ப்பு வெளியானதும் மொபைலில் தனது மகளின் புகைப்படத்தை பார்த்து ஹாசினியின் தந்தை கதறி அழுதார்.

தண்டனை விபரம்

ஆள்கடத்தல், கொலை, தடயங்களை மறைத்தல், பாலியல் துன்புறுத்தல் போன்ற பிரிவுகளில் குற்றங்கள் நிரூபணமானது.

மரண தண்டனை தவிர 46 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது

பெற்றோரிடம் இருந்து சிறுமியை கடத்திய ஆள் கடத்தலுக்கு 7 ஆண்டுகள், பாலியல் வன்கொடுமைக்கு 10 ஆண்டுகள், மானபங்கம் குற்றத்திற்கு 7 ஆண்டுகள், தடையங்களை மறைக்க முயன்றதற்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ஹாசினி கொலை வழக்கு விபரங்கள்

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்