பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்துள்ள நடிகர் கமல்ஹாசன்

Report Print Kabilan in இந்தியா

நாளை தனது அரசியல் பயணத்தை தொடங்க உள்ள நடிகர் கமல்ஹாசன், மதுரையில் தான் நடத்தும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் என பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

தீவிர அரசியலில் இறங்கியுள்ள நடிகர் கமல்ஹாசன், நாளை ராமேஸ்வரத்தில் உள்ள மறைந்த அப்துல்கலாம் வீட்டில் இருந்து தனது அரசியல் பயணத்தை தொடங்க உள்ளார்.

அதனைத் தொடர்ந்து சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் அவர், தனது கட்சியின் பெயர், கொடி, கொள்கை ஆகியவற்றை தனது ரசிகர்களின் முன்பு அறிவிக்க உள்ளார்.

இந்நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் கூறுகையில், ‘நாளை துவங்க உள்ளது நம் நெடும் பயணம். நாளை மாலை 6 மணிக்கு, மதுரை ஒத்தக்கடை மைதானத்தில் ஒரு மாபெரும் பொதுக்கூட்டத்தில் நமது கட்சிக் கொடியை ஏற்றவுள்ளேன்.

புதிய கட்சியின் பெயரையும், எமது கொள்கையின் சாராம்சத்தையும் விளக்கவுள்ளேன். வருக வருக புது யுகம் படைக்க’ என தெரிவித்துள்ளார்.

கமல்ஹாசன் சமீபத்தில் கருணாநிதி, ரஜினிகாந்த், விஜயகாந்த், சீமான் உள்ளிட்ட அரசியல் கட்சிப் பிரபலங்கள் பலரையும் சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்