5 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: குற்றவாளியை அடித்தே கொன்ற பொதுமக்கள்

Report Print Santhan in இந்தியா

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த குற்றத்திற்காக காவல்நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த இரண்டு பேரை பொதுமக்கள் வெளியில் இழுத்து வந்து அடித்து கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அருணாசல பிரதேசம் லோகித் மாவட்டத்தில் கடந்த 12-ஆம் திகதி 5 வயது சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார்.

கொலை செய்யப்பட்ட சிறுமியின் உடல் 5 நாட்களுக்கு பிறகு கண்டுபிடிக்கப்பட்டது, இதுதொடர்பாக பொலிசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை இச்சம்பவம் தொடர்பாக இரண்டு பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

வழக்கை விசாரித்த நீதிபதி, பொலிசார் கஸ்டடியில் வைத்து விசாரிக்கும் படி தெரிவித்தார், அதன் படி லாக்கப்பில் இருவரும் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில் இந்த தகவல் ஊர் மக்களுக்கு தெரியவந்ததால், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காவல்நிலையத்தை முற்றுகையிட்டு

லாக்கப்பை உடைத்து, இருவரையும் வெளியே இழுத்து வந்து, அவர்களை கண்மூடித்தனமாக அடித்தனர்.

இதில் அந்த இருவரும் வலி தாங்க முடியாமல் கெஞ்சியுள்ளனர், ஆனால் விடாத மக்கள் அவர்களை அடித்தே கொன்று அங்கிருக்கும் சந்தைப் பகுதியில் உடலை வீசிவிட்டு சென்றுள்ளனர்.

கொல்லப்பட்ட இருவரில் ஒருவரின் பெயர் சஞ்சய் சாபூர், மற்றொருவரின் பெயர் ஜக்தீஸ் லோகர் எனவும் இவர்கள் இருவரும் அஸ்ஸாம்மைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...