என் தம்பி உயிரை காப்பாற்றிய ஸ்ரீதேவி: பார்வையற்ற நபர் கண்ணீர்

Report Print Raju Raju in இந்தியா
415Shares
415Shares
ibctamil.com

ஸ்ரீதேவியின் மரண செய்தி அறிந்து பார்வையற்ற ரசிகர் ஒருவர் கடந்த 2 நாட்களாக அவர் வீட்டு வாசலில் காத்திருந்திருக்கும் சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

துபாயில் உயிரிழந்த ஸ்ரீதேவியின் உடல் நேற்றிரவு மும்பைக்கு கொண்டு வரப்பட்டது.

இந்நிலையில் உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்த ஜதின் வால்மிகி என்கிற பார்வையற்ற ரசிகர் கடந்த 2 நாட்களாக ஸ்ரீதேவி வீட்டு வாசலில் காத்துக் கொண்டிருந்திருக்கிறார்.

அவர் கூறுகையில், என் சகோதரருக்கு மூளையில் கட்டி ஏற்பட்டபோது அறுவை சிகிச்சை செய்ய ஸ்ரீதேவி ரூ. 1 லட்சம் எனக்கு கொடுத்ததுடன், கட்டணத்தில் ரூ. 1 லட்சம் குறைக்க மருத்துவமனை நிர்வாகத்திடம் பேசினார் என உருக்கத்துடன் கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்