ஸ்ரீதேவி உடல் இந்தியா வந்தடைய அம்பானிக்கு எத்தனை லட்சங்கள் தெரியுமா?

Report Print Harishan in இந்தியா
1028Shares
1028Shares
lankasrimarket.com

நடிகை ஸ்ரீதேவியின் உடல் இந்தியா வந்தடைய கிட்டத்தட்ட 70 லட்ச ரூபாய் செலவாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.

குடும்ப நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக துபாய் சென்றிருந்த நடிகை ஸ்ரீதேவி, கடந்த 24-ஆம் திகதியன்று எதிர்பாராத விதமாக உயிரிழந்தார்.

இந்தியா முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்ட ஸ்ரீதேவியின் திடீர் மரணத்திற்கு பல்வேறு முக்கிய பிரமுகர்கள் மற்றும் நடிகர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

ஸ்ரீதேவி துபாயில் மரணமடைந்ததால் அவரின் உடலை இந்தியா கொண்டு வர தொழில் அதிபர் அனில் அம்பானி தனி விமானத்தை கடந்த 25-ஆம் திகதி அனுப்பி வைத்திருந்தார்.

இந்நிலையில், துபாயின் வழக்கமான சட்ட விதிமுறைகள் நிறைவடைந்து நேற்று இரவு அந்த தனி விமானம் மூலம் ஸ்ரீதேவியின் உடல் இந்தியா வந்தடைந்தது.

இதற்கான விமான வாடகையாக மட்டும் அனில் அம்பானிக்கு 70 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய் வாடகையாக செலுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்