நான் ஒரு நடிகையாக ஆக ஸ்ரீதேவி தான் முக்கிய காரணம் : மனம் திறந்த பிரபல நடிகை

Report Print Athavan in இந்தியா
280Shares

சமீபத்தில் பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா ஒரு பத்திரிகைக்கு ஒரு உணர்ச்சிகரமான அஞ்சலி எழுதியுள்ளார், அதில் ஸ்ரீதேவி ஒரு சூப்பர் ஸ்டார் அவரை சிறுவயதில் ரசிக்க தொடங்கிய பின்னர் தான் தனக்கும் நடிகை ஆகவேண்டிய ஆசை வந்தது என குறிப்பிட்டுள்ளார்.

நடிகை ஸ்ரீதேவி கடந்த பிப்ரவரி 24 ம் திகதி திடீரென மரணம் அடைந்தார். 80 மற்றும் 90 களில் பிறந்தவர்களுக்கு அவர்களின் குழந்தை பருவத்தில் ஒரு பிரிக்க முடியாத நடிகையாக அவர் இருந்தவராவார்.

ஸ்ரீதேவியின் திரைப்படங்களில் இருந்து பாடல்களைக் கேட்டு, அவருடைய நேர்காணல்களை மீண்டும் பார்வையிட்டும் அவர் மறைந்த அதிர்சியில் இருந்து மீள முயற்சிக்கிறேன்.

ஸ்ரீதேவியின் பாணியையும் அவரின் கடும் உழைப்பையும் எல்லோரும் எவ்வாறு பின்பற்ற வேண்டும் என்று பிரியங்கா மேலும் கூறினார்."எல்லோரும் ஸ்ரீதேவியை நேசித்தனர், அவரைப் போலவே இருக்க விரும்பினர், அவர் ஒரு வேடிக்கையான தீவிர நடிகை. அவரின் தூய அர்ப்பணிப்பு, திறமை, கடின உழைப்பு ஆகியவற்றை நினைத்து நெகிழ்கிறேன்” என்றார் பிரியங்கா.

தன் சிறுவயதில் ஸ்ரீதேவியின் படங்களை பாடல்களை பார்த்து ரசிக்க தொடங்கினேன் அதுமுதல் தனக்கும் அவரைப் போன்ற நடிகையாக வேண்டும் என்ற ஆசைவந்தது. இன்று நான் நடிகையாக இருக்கிறேன் அதற்கு காரணம் ஸ்ரீதேவி என்றால் அதுமிகையாகாது என்றார் பிரியங்கா சோப்ரா.

பிப்ரவரி 27 ம் தேதி துபாயில் மரணமடைந்தார். மற்றும் பெப்ரவரி 28 அன்று மும்பையில் அரசு மரியாதையுடன் அவருக்கு இறுதிச் சடங்கு நடைபெற்றது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்