கருவுற்ற நிலையில் பிறந்த குழந்தை: போராடி மீட்ட மருத்துவர்கள்

Report Print Arbin Arbin in இந்தியா

இந்தியாவில் 7 மாத குழந்தையின் வயிற்றில் இருந்து 114 கிராம் எடை கொண்ட கருவை மருத்துவர்கள் அகற்றியுள்ளனர்.

இந்திய மாநிலம் குஜராத்தில் தங்களது மகளின் வயிற்றில் உருவான வீக்கம் நாளுக்கு நாள் வளர்ந்து வருவதைக் கண்டு அவரது பெற்றோர்கள் கவலை அடைந்துள்ளனர்.

இதனையடுத்து 7 மாதமேயான குழந்தையுடன் மருத்துவமனை சென்ற அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தையின் வயிற்றில் கரு ஒன்று வளர்ந்து வருவதாக தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து கடந்த மாதம் 19 ஆம் திகதி குறித்த குழந்தையின் வயிற்றில் இருந்து 114 கிராம் எடை கொண்ட அந்த கருவை மருத்துவர்கள் அகற்றியுள்ளனர்.

உலக அளவில் இதுவரை 200 குழந்தைகளுக்கு மட்டுமே இதுபோன்ற நிலை ஏற்பட்டதாகவும் மருத்துவர்கள் விளக்கமளித்துள்ளனர்.

தற்போது குறித்த குழந்தை மிகவும் ஆரோக்கியமாக இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்