ஸ்ரீதேவியின் அஸ்தியை ராமேஸ்வரம் கடலில் கரைத்த போனி கபூர்!

Report Print Harishan in இந்தியா
1332Shares

நடிகை ஸ்ரீதேவியின் அஸ்தி தமிழகத்தின் ராமேஷ்வரத்தில் உள்ள அக்னி தீர்த்தக் கடற்கரையில் கரைக்கப்பட்டது.

குடும்ப நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக துபாய் சென்றிருந்த நடிகை ஸ்ரீதேவி கடந்த 24-ஆம் திகதியன்று திடீர் மரணம் அடைந்தார்.

அதன்பின் துபாய் அரசின் சட்டவிதிமுறைகள் நிறைவடந்து கடந்த 28-ஆம் திகதி தனி விமானம் மூலம் ஸ்ரீதேவியின் உடல் இந்தியா வந்தடைந்தது.

மும்பை அந்தேரி மேற்கு லோகண்ட்வாலா காம்ப்ளக்ஸில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஸ்ரீதேவியின் இறுதிச் சடங்கில் ஏராளமான திரை நட்சத்திரங்கள், அரசியல் தலைவர்கள், ரசிகர்கள் கலந்துகொண்டு இறுதி அஞ்சலி செலுத்தி இருந்தனர்.

அதன்பின் முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்ட ஸ்ரீதேவி உடலின் அஸ்தியை ராமேஷ்வரத்தில் கரைப்பதாக அவரது கணவர் போனி கபூர் முடிவு செய்துள்ளார்.

மேலும், இதற்காக ஸ்ரீதேவி அஸ்தியுடன் மும்பையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்துள்ள ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் மற்றும் இரு மகள்களும் சேர்ந்து அவரது அஸ்தியை ரமேஷ்வரத்தின் அக்னி தீர்த்தக் கடற்கரையில் கரைத்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்