இளைஞன் விளையாட்டாக செய்த செயல்: மின் கம்பத்தில் கட்டி வைத்து அடித்த பொது மக்கள்

Report Print Santhan in இந்தியா
538Shares

தமிழகத்தில் குழந்தையின் கையை பிடித்து இழுத்த நபரை பொதுமக்கள் மின்சார கம்பத்தில் வைத்து அடித்ததால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர் மாவட்டம் அவிநாசி நகரில் வீட்டின் வெளியே குழந்தை விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது கட்டடத் தொழிலாளியான பூமிநாதன் என்பவர் விளையாடிக் கொண்டிருந்த குழந்தையின் கையை பிடித்து இழுத்துள்ளார்.

இதனால் குழந்தை கத்தியதால், அங்கிருந்த மக்கள் அவரை குழந்தையை கடத்துபவன் என நினைத்து விரட்டியுள்ளனர். இதைக் கண்டு பதற்றமடைந்த பூமிநாதன் தப்பி ஓட முயற்சித்துள்ளார்.

இருப்பினும் பொதுமக்கள் விரட்டி பிடித்து அங்கிருந்த மின் கம்பி ஒன்றி கட்டி வைத்து அடித்துள்ளனர். இந்த தகவலை அறிந்த பொலிசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவரை பொதுமக்களிடமிருந்து காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

பொலிசார் அங்கு விசாரணை மேற்கொண்ட போது, நான் குழந்தையை கடத்த வரவில்லை எனவும், விளையாட்டாக குழந்தையை கையை பிடித்து இழக்கத் தான் செய்ததாக கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்