நடிகை ஸ்ரீதேவி மகள்களைப் பற்றி தப்பாக பேசிய நபர்: நெத்தியடி பதில் கொடுத்த பிரபலம்

Report Print Santhan in இந்தியா

பிரபல நடிகையான ஸ்ரீதேவி கடந்த 24-ஆம் திகதி மரணமடைந்தார். இவருக்கு ஜான்வி கபூர், குஷி கபூர் என்ற இரண்டு மகள்கள் உள்ளனர்.

இரண்டு பேரும் அம்மாவின் பிரிவை தாங்க முடியாமல் தவித்து வருகின்றனர். இதற்கிடையில் இன்ஸ்டாகிராமில் நபர் ஒருவர் ஸ்ரீதேவியின் மகள்களைப் பற்றி தவறாக பேசியுள்ளார்.

இதைக் கண்ட போனிகபூரின் முதல் மனைவியின் மகள் அன்ஷுலா நெத்தியடி பதில் கொடுத்துள்ளார். அதாவது அதில் எங்கள் தங்கைகளைப் பற்றி தவறாக பேச வேண்டாம் என்று குறிப்பிட்டிருந்தார்.

மேலும் வரும் 7-ஆம் திகதி 21 வயதை எட்டும் ஜான்வி கபூர், தன்னுடைய அம்மா இல்லாமல் என்னுடைய பிறந்த நாளை நினைத்து கூட பார்க்க முடியவில்லை என்றும், அவர் தொடர்பான நினைவுகளை பகிர்ந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்