போனி கபூரால் வேதனையுடன் வாழ்ந்து மறைந்த ஸ்ரீதேவி: உறவினர் பரபரப்பு பேட்டி

Report Print Raju Raju in இந்தியா

ஸ்ரீதேவி தனது கணவர் போனி கபூரால் வேதனையில் வாழ்ந்து வேதனையுடனே இறந்துவிட்டதாக அவரின் உறவினர் வேணுகோபால் ரெட்டி கூறியுள்ளார்.

நடிகை ஸ்ரீதேவி கடந்த 24-ஆம் திகதி துபாயில் உயிரிழந்தார், இந்நிலையில் ஸ்ரீதேவியின் மாமா வேணுகோபால் ஸ்ரீதேவியின் வாழ்க்கை குறித்து பேசியுள்ளார்.

அவர் கூறுகையில், ஸ்ரீதேவியின் அம்மா ராஜேஸ்வரிக்கு போனி கபூரை பிடிக்காது, போனி தங்கள் வீட்டிற்கு வந்தபோது அவரை அசிங்கப்படுத்தினார் ராஜேஸ்வரி.

ராஜேஸ்வரியின் எதிர்ப்பையும் மீறி ஸ்ரீதேவி போனி கபூரை திருமணம் செய்ய விரும்பிய நிலையிலேயே அவர்களின் திருமணம் நடந்தது.

சில படங்களை தயாரித்து போனி கபூருக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்ட நிலையில் நஷ்டத்தை ஈடுகட்ட ஸ்ரீதேவி தனது சொத்துக்களை விற்றார்.

ஸ்ரீதேவி தன் இதயத்தில் வலியுடனேயே வாழ்ந்து வலியுடனேயே இறந்தார்.

போனி தயாரித்த ஒரு படத்தால் அவர்களுக்கு கடும் நிதி பிரச்சனை ஏற்பட்டது.

இதனால் வெளியுலகிற்காக சிரித்த முகமாக இருந்தாலும், நிஜத்தில் ஸ்ரீதேவி நிம்மதி இல்லாமல் அல்லாடினார்.

கடனை அடைக்க ஸ்ரீதேவி தனது சொத்துக்களை விற்ற நிலையில் பணம் இல்லாத காரணத்தால் தான் மீண்டும் படங்களில் நடிக்க வந்தார்.

போனிக்கு உடல்நலம் சரியில்லாமல் உள்ளதும் கவலை அளிப்பதாக எங்களிடம் அவர் கூறினார்.

அதே போல மூத்த தாரத்தின் மகன் அர்ஜுனுக்கும், தனக்கும் இடையே சுமூகமான உறவு இல்லை என்று தங்களிடம் ஸ்ரீதேவி கூறியதாக தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers