இறந்த மனைவியை தோளில் சுமந்து சென்றவரின் தற்போதைய நிலை

Report Print Kabilan in இந்தியா

இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் பணமில்லாத காரணத்தால் இறந்த தனது மனைவியை தோளில் சுமந்து சென்ற நபரின் வாழ்க்கைத் தரம் தற்போது உயர்ந்துள்ளது.

ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் Dana Manjhi, கடந்த 2016ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், இவரின் இரண்டாவது மனைவி காசநோய் பாதிப்பால் இறந்துவிட்டார்.

அச்சமயம் ஆம்புலன்ஸ் உதவி இல்லாததாலும், பணம் இல்லாத காரணத்தாலும் தனது மனைவியின் உடலை தோளிலேயே 10 கிலோ மீட்டர் வரை தூக்கிச் சென்றார்.

அப்போது, அவரின் 12 வயது மகளும் அழுதவாறே தந்தையை பின்தொடர்ந்து சென்றார், இதுதொடர்பான புகைப்படங்கள் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இதனைத் தொடர்ந்து, ஒடிசா மாநில அரசு Dana Manjhi-யின் மகளின் படிப்பிற்கான உதவிகளை செய்தது.

மேலும், 'Indira Awaas Yojana' திட்டத்தின்படி Manjhi-க்கு வீடு ஒன்றையும் அம்மாநில அரசு ஒதுக்கியது.

பஹ்ரைன் நாட்டின் இளவரசரும், பிரதமருமான Khalifa Bin Salman Al Khalifa ரூ.9 லட்சத்தை உதவித் தொகையாக Manjhi-க்கு அளித்தார்.

தற்போது, மூன்றாவது திருமணம் செய்துள்ள Manjhi-யின் வங்கி கணக்கில் ரூ.36 லட்சம் பணம் உள்ளது.

இந்நிலையில், புதிதாக இருசக்கர வாகனம் ஒன்றையும் Manjhi வாங்கியுள்ளார். ஆனால், அவருக்கு வாகனம் ஓட்ட தெரியாது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்