திருச்சி உஷாவின் கணவருக்கு நடிகர் கமல் ஆறுதல்

Report Print Arbin Arbin in இந்தியா

உயிரிழந்த திருச்சி உஷாவின் கணவர் ராஜாவுக்கு நடிகர் கமல் தொலைபேசியில் ஆறுதல் தெரிவித்தார்.

திருச்சி திருவெறும்பூரில் போக்குவரத்து காவல் ஆய்வாளர் இருசக்கர வாகனத்தில் சென்ற தம்பதியரை எட்டி உதைத்ததில் 3 மாத கர்ப்பிணியான உஷா கீழே விழுந்து உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கிய நிலையில் போக்குவரத்து ஆய்வாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் உயிரிழந்த உஷாவின் கணவர் ராஜாவுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் போனில் தொடர்பு கொண்டு ஆறுதல் கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers