தலித் இளைஞருடன் காதல்: பெற்ற மகளை துடிதுடிக்க கொன்ற பெற்றோர்

Report Print Balamanuvelan in இந்தியா

கர்நாடகாவில் தலித் இளைஞரை காதலித்ததற்காக பெற்ற மகளை அவரது பெற்றோரே விஷம் வைத்து கொன்ற சம்பவம் நடந்துள்ளது.

கர்நாடகாவின் Gollanabeedu என்னும் கிராமத்தைச் சேர்ந்த Sushma (20) என்னும் பெண் தலித் இளைஞரைக் காதலித்து வந்தார்.

இதைக் கேள்விப்பட்ட அவளது பெற்றோர் மகளின் மனதை மாற்ற பலமுறை முயற்சி செய்துள்ளனர்.

மகள் சொல் பேச்சு கேட்காததால் உறவினர் வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளனர், அங்கு சென்றும் மகள் காதலை கைவிடவில்லை.

இதனால் மீண்டும் அழைத்து வந்ததுடன், உறவினர் ஒருவரை திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தியுள்ளனர்.

அவள் செவி கொடுக்காமல் போகவே, அவளுக்கு விஷம் கலந்த ஆரஞ்சு ஜூஸைக் கொடுத்துள்ளனர்.

ஜூஸின் சுவை வேறு மாதிரி இருப்பதை உணர்ந்து, குடிக்க மறுத்த போது வலுக்கட்டாயமாக அவளை குடிக்க வைத்து கொலை செய்துள்ளனர்.

சுமார் ஆறு மணிநேரம் துடிதுடித்து இறந்து போன மகளை, யாருக்கும் தெரியாமல் தகனமும் செய்துவிட்டார்கள்.

இதுபற்றி தகவல் பரவ, கான்ஸ்டபிள் ரவி என்பவர் மேலதிகாரிக்கு தகவல் கொடுத்த பின்னர் இக்கொலை சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Sushmaவின் பெற்றோர் மற்றும் உறவினர் ஒருவர் உட்பட மூவர் கொலை மற்றும் ஆதாரங்களை அழித்த குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

வழக்கமாக உயர் சாதியைச் சேர்ந்த ஒரு பெண்ணைக் காதலித்ததற்காக தலித்துகள் கொல்லப்படுவது உண்டு.

முதல் முறையாக தலித் ஒருவரைக் காதலித்ததற்காக உயர் சாதிப்பெண் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் தற்போது நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers