இளம்பெண்ணை காதலித்து ஏமாற்றிய இலங்கை அகதிக்கு சிறைத்தண்டனை

Report Print Santhan in இந்தியா

அகதிகள் முகாமில் வசித்து வந்த பெண் அகதியை கர்ப்பமாக்கி ஏமாற்றிய இலங்கை அகதி இளைஞருக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இராமநாதபுரம் மாவட்டத்தின் மண்டபம் அகதிகள் முகாமில் வசித்து வருபவர் குணபாலசிங்கம். இலங்கை அகதியான இவருக்கு பிரசாத்(24) என்ற மகன் உள்ளார்.

இந்நிலையில் பிரசாத்துக்கும் அதே முகாமில் வசித்து வந்த யோகநாதனின் மகள் சுகன்யாவுக்கு காதல் மலர்ந்துள்ளது. தாங்கள் காதலித்த காலங்களில் இருவரும் ஒன்றாக இருந்துள்ளனர்.

இதன் விளைவாக சுகன்யா கர்ப்பமானார். இந்த விடயத்தை அறிந்தவுடன் பிரசாத், சுகன்யாவை திருமணம் செய்யாமல் ஏமாற்றியுள்ளார்.

இதனால் பெரிதும் ஏமாற்றமடைந்த சுகன்யா கடந்த 2012-ஆம் ஆண்டு இராமேஸ்வரத்தில் இருக்கும் மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

புகாரை பெற்ற பொலிசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். தொடர்ந்து நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு நடந்து வந்தது.

வழக்கின் போது சுகன்யாவுக்கு குழந்தை பிறந்துவிட்டதால், குழந்தைக்கு மரபணு சோதனை செய்யப்பட்டது. அந்த சோதனையில் பிரசாந்துக்கும், சுகன்யாவுக்கும் பிறந்தது தான் இந்த குழந்தை என்பது உறுதியானது.

இதையடுத்து சுகன்யாவை மானபங்கம் செய்த குற்றத்திற்காக பிரசாந்துக்கு 7 ஆண்டு சிறைத் தண்டையும் 26 ஆயிரம் ரூபாய் அபராதமும் அபராதத் தொகையை செலுத்தத் தவறினால் மேலும் 3 ஆண்டுகள் சிறைத்தண்டனையை அனுபவிக்க வேண்டும் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

மேலும் திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றிய குற்றத்துக்காக ஒரு வருட சிறையும், .5 ஆயிரம் ரூபாய் அபராதமும் அபராதத் தொகையை செலுத்தத் தவறினால் மேலும் ஒரு ஆண்டு சிறைத் தண்டனையை அனுபவிக்க வேண்டும்.

அபராத தொகையான 31 ஆயிரம் ரூபாயில் 30 ஆயிரம் ரூபாயை பிராசந்த் சுகன்யாவுக்கு கொடுக்க வேண்டும் எனவும் மீதம் உள்ள ஆயிரம் ரூபாயை வழக்கு செலவுக்காக கொடுக்க வேண்டும் எனவும் சிறைத்தண்டனை ஆண்டுகள் மொத்தம் 8 ஆண்டுகளை ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும் என்பதால் 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்திருப்பதாக தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers