மனைவி மற்றும் குழந்தைகளை கொன்றது ஏன்? கணவர் பரபரப்பு வாக்குமூலம்

Report Print Raju Raju in இந்தியா
1233Shares
1233Shares
lankasrimarket.com

இந்தியாவில் மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்ட நிலையில அவரையும் இரண்டு மகள்களையும் கொலை செய்த கணவரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேசத்தின் சித்ராகுட் மாவட்டத்தை சேர்ந்தவர் அஜித் ரைதாஸ் (36). இவர் மனைவி மைனா (32). தம்பதிக்கு நந்தினி (8) மற்றும் பிங்கி (6) என இரண்டு மகள்கள் உள்ளனர்.

இந்நிலையில் வேறு நபருடன் மைனாவுக்கு தொடர்பு உள்ளது என அஜித்துக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

அஜித்தின் உறவினர் ராமும் இது குறித்து அவரிடம் தூண்டி விட அதை அஜித் உறுதியாக நம்பியுள்ளார்.

இது குறித்து மைனாவுடன் அஜித்துக்கு நேற்று சண்டை ஏற்பட்ட நிலையில் ஆத்திரத்தில் அவரையும், இரண்டு பிள்ளைகளையும் கத்தியால் குத்தி அஜித் கொலை செய்துள்ளார்.

இதற்கு ராமும் உதவியுள்ளார். சம்பவம் குறித்து தகவலறிந்த பொலிசார் மூன்று சடலங்களையும் கைப்பற்றி விட்டு அஜித் மற்றும் ராமை கைது செய்த நிலையில் நடந்த அனைத்தையும் அஜித் வாக்குமூலமாக அளித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்