காட்டுத் தீயில் சிக்கி தவிக்கும் 40 கல்லூரி மாணவிகள்: ஒருவர் பலி?

Report Print Santhan in இந்தியா
906Shares
906Shares
lankasrimarket.com

தமிழகத்தில் காட்டுப்பகுதியில் டிரக்கிங் சென்ற 40 கல்லூரி மாணவிகள், காட்டுத் தீயில் சிக்கி இருப்பதாகவும், அதில் ஒருவர் பலியாகியிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தேனி மாவட்டம், போடி அருகே குரங்கணி மலைப்பகுதி உள்ளது. கோடை காலம் என்பதால், போடி, பெரியகுளம், குரங்கனிஉள்ளிட்ட காட்டுப்பகுதிகளில் மாலை நேரங்களில் காட்டுத்தீ ஏற்பட்டு வருகிறது.

இந்நிலையில், கோவை, ஈரோடு மாவட்டங்களைச் சேர்ந்த 40 கல்லூரி மாணவிகள் குரங்கனி மலைப்பகுதிக்கு மலை ஏற்ற பயிற்சிக்கு சென்றுள்ளனர்.

பயிற்சியில் ஈடுபட்ட போது கல்லூரி மாணவிகள் காட்டுத்தீயில் சிக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

காட்டுத்தீயில் சிக்கித் தவிக்கும் மாணவிகளை மீட்கும் பணியில் தீயணைப்புத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

தீயில் சிக்கியுள்ள மாணவிகளை ஹெலிகாப்டர் மூலம் மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், அமைச்சர் நிர்மலா சீதாராமனின் உத்தரவின் பேரில் மாணவிகளை மீட்க விமானப்படை ஹெலிகாப்டர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த காட்டுத்தீயில் சிக்கி மாணவி ஒருவர் பலியாகியுள்ள நிலையில் 12 பேர் வரை உயிரோடு மீட்கப்பட்டு இருப்பதாகவும் இதில் 3 பேர் குழந்தைகள் எனவும் முதல் கட்டத்தகவலில் வெளியாகியுள்ளது. மீட்கப்பட்ட அனைவரும் திருப்பூர் சுற்றுலா பயணிகள் எனவும் கூறப்படுகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்