காட்டுத் தீயில் சிக்கி கருகிய மாணவிகள்: உயிரிழந்தவர்கள் விவரம் வெளியானது

Report Print Santhan in இந்தியா
586Shares
586Shares
lankasrimarket.com

தமிழகத்தில் ஏற்பட்ட பயங்கர காட்டுத் தீ காரணமாக 9 பேர் உயிரிழந்திருப்பதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

தேனி மாவட்டம் போடியை அடுத்த குரங்கணி மலைப்பகுதியில் மலையேற்ற பயிற்சிக்காக சென்ற மாணவ, மாணவிகள் காட்டுத் தீயில் சிக்கினா்.

இரு அணிகளாக சென்ற 39 நபா்களை மீட்கும் பணியில் உள்ளூா் பொதுமக்கள், வனத்துறையினா், தீயணைப்பு வீரா்கள், காவல் துறையினா் மற்றும் மீட்புப் பணிகளில் இந்திய விமானப்படையின் ஹெலிகாப்டர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

இவா்களில் தற்போது வரை 27 போ் மீட்கப்பட்டுள்ளனர், தொடா்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

மீட்கப்படும் அனைவரும் தேனி மருத்துவமனை, மதுரை அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த தீ விபத்தின் காரணமாக 8 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில், 9 பேர் துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்துவிட்டதாக தேனி ஆட்சியர் பல்லவி பல்தேவ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தெரிவிக்கையில், பற்றி எரியும் தீயைப் பார்த்து அவர்கள் பயந்து ஓடி பள்ளத்தில் விழுந்துள்ளனர். இதனால் அவர்கள் அதிலிருந்து மீளமுடியாமல் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

உயிரிழந்த 9 பேரின் சடலங்களை மீட்கும் பணி நடைபெற்று வருவதாகவும், உயிரிழந்தவர்கள் குறித்த பெயர்கள் போன்றவகைகளையும் தெரிவித்துள்ளார்.

அதில், ஈரோட்டைச் சேர்ந்த விஜயா, விவேக், தமிழ்ச்செல்வி, சென்னையைச் சேர்ந்த அகிலா, பிரேமலதா, புனிதா, சுபா, அருண், விபின் ஆகியோர் உயிரிழந்துள்ளதாகவும், 4 பெண்கள், 4 ஆண்கள் மற்றும் ஒரு சிறுவரின் உடல் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

வீடியோவை காண...

8 பேர் பலத்த தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்த விபின் என்பவரின் உடல் மலைப்பகுதியிலிருந்து மீட்கப்பட்டுள்ளது. அவர் கோயமுத்தூர் கிணத்துக்கடவு பகுதியைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது.

மேலும் தீ விபத்தின் காரணமாக மலைகளுக்கிடையில் ஒளிந்திருந்த மாணவிகள் கருநிறமாக காட்சியளிக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்