ரஜினியை கடுமையாக விமர்சித்த கமல்ஹாசன்: காரணம் என்ன?

Report Print Kabilan in இந்தியா
369Shares
369Shares
lankasrimarket.com

தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள கமல்ஹாசன், காவிரி விவகாரம் மட்டுமில்லாமல் பல விடயங்களில் ரஜினிகாந்த் பதிலளிக்காமல் நழுவுகிறார் என கடுமையாக விமர்சித்துள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் கோவை, ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

இன்று கோவையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், தண்ணீர் சேமிப்பில் விவசாயிகள் மட்டுமின்றி அனைவரும் ஈடுபட வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் உடனடியாக அமைக்கப்பட வேண்டும். காவிரி பிரச்சனையை தீர்க்க முடியாத பிரச்சனையாக மாற்றி இருக்கக் கூடாது என தெரிவித்துள்ளார்.

மேலும், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பான கேள்விக்கு, பதில் அளிக்க ரஜினி மறுப்பது குறித்து கமலிடம் கேட்கப்பட்டது.

அதற்கு அவர் கூறுகையில், ‘காவிரி விவகாரம் என்றில்லை, பல விடயங்களில் அவர் பதில் சொல்ல மறுக்கிறார். அந்த இடத்திலிருந்து அவர் நழுவுகிறார்’ என தெரிவித்துள்ளார்.

கடந்த சனிக்கிழமை, காவிரி விவகாரம் தொடர்பாகவும், சென்னை அஸ்வினி கொலை வழக்கு தொடர்பாகவும் ரஜினிகாந்திடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் பதிலளிக்காமல் வேகமாக சென்றுவிட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்